எமிலியா ஓபன் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி

பார்மா- இத்தாலியின் பார்மா நகரில் எமிலியா ரோமாக்னா ஓபன் மகளிர் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில், 39 வயதான முதல்நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 2வது சுற்றில், 25 வயதான  செக்குடியரசின் கேடரினா சினியகோவாவுடன் மோதினார். 7-6(4), 6-2 என்ற செட் கணக்கில் சினியகோவா வெற்றி பெற்றார்.

அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் 1-6,6-4,7-5 என்ற செட் கணக்கில், 2வது சுற்றில், ரஷ்யாவின் டாரியா கசட்கினாவை வீழ்த்தினார். அமெரிக்காவின் அனிசிமோவா, குரோஷியாவின் பெட்ரா மார்டிக் உள்ளிட்டோரும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

Related Stories: