×

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நடமாடும் ஆக்சிஜன் பேருந்து வசதியை தொடங்கி வைத்தார் ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி

சென்னை: சென்னையில் கொரோனா  பாதிப்பு காரணமாக தினந்தோறும் அதிகளவு மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதில் மூச்சு திணறல் காரணமாக பாதிக்கப்படுபவர்களுக்கு ஆக்சிஜன் வழங்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் அதிக அளவு நோயாளிகள் வருவதால் சிகிச்சை அளிப்பதற்கு படுக்கை வசதி கொண்ட பெட்டுகள்  இல்லாமல் ஆம்புலன்சில் சிகிச்சை அளிக்கக்கூடிய நிலை ஏற்படுகிறது இதனை தடுக்கும் விதமாக அரசு பெட்டுகளின்  எண்ணிக்கை  படுக்கை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு ராஜஸ்தான் சமூகத்தை சேர்ந்த சங்கத்தினர்  நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய ஆக்சிஜன் வசதியுடன் கூடிய  பேருந்தை வழங்கியுள்ளனர். இதனை ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம்  மூர்த்தி தொடங்கி வைத்தார்.


முதல்வர் டாக்டர் பாலாஜி,  மருத்துவ அதிகாரி டாக்டர் ரமேஷ் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் ராஜஸ்தான் சமூகத்தை சேர்ந்த சங்கத்தினர் உடன் இருந்தனர். இந்த பேருந்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மூச்சுத் திணறல் ஏற்பட்டவர்களுக்கு ஒரே நேரத்தில் 10 பேருக்கு ஆக்சிஜன் வழங்கப்படுகிறது. இவர்கள் மருத்துவமனையில் படுக்கை வசதி கிடைக்காதபோது இந்த பேருந்தில் தற்காலிகமாக சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் படுக்கை வசதி கிடைத்தவுடன் வார்டுக்கு மாற்றப்படுவார்கள்.


மேலும் 10 சொகுசு பேருந்துகள் மருத்துவமனைக்கு வர இருப்பதாகவும்  இதனால் ஓரளவிற்கு ஆம்புலன்சில் காத்து கிடப்பவர்களுக்கு இந்த பேருந்து மூலம் அந்தக் கவலை இனி வேண்டாம் என கூறினார். இதில் சிகிச்சை பெறுபவர்களுக்கு பார்த்துக் கொள்ள மருத்துவர்கள் செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா  பாதிப்பு காரணமாக வரும்  நோயாளிகளுக்கு சிறப்பாக சிகிச்சை அளிக்க ஸ்டான்லி மருத்துவமனையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் முழுக்க முழுக்க கொரோனா  சிகிச்சை மையமாக  மாறியுள்ளதாக மருத்துவமனை முதல்வர் டாக்டர் பாலாஜி தெரிவித்தார். இனி கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு படிபடிப்பாக குறையும் என கூறினார். 



Tags : Rayapuram MLA ,Idreem Murthy ,Stanley Government Hospital , Stanley Government Hospital, Oxygen Bus, Facility, Idream Murthy
× RELATED குடிபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய காவலர் மீது வழக்குப்பதிவு