×

சிங்கப்பூர் மரபணு மாற்ற கொரோனா வைரஸ் சர்ச்சை டெல்லி முதல்வர் இந்தியா சார்பில் பேசவில்லை: வெளியுறவுத்துறை அமைச்சர் கண்டனம்

டெல்லி: சிங்கப்பூர் மரபணு மாற்ற கொரோனா வைரஸ் சர்ச்சை, டெல்லி முதல்வர் இந்தியா சார்பில் பேசவில்லை எனவெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். சிங்கப்பூரில் குழந்தைகளிடம் தீவிரமாக கொரோனா பரவி வருவதால் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இந்தியாவில் காணப்படும் பி.1.617.2 என்ற மரபணு மாற்ற கொரோனா வைரஸ் சிங்கப்பூரிலும் பரவி இருப்பதாக அந்நாடு  நேற்று தெரிவித்தது. சிங்கப்பூரில் மரபணு மாற்ற கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு இருப்பதாக நேற்று சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டது. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் உடனடியாக வெளியிட்ட டுவிட் பதிவில், சிங்கப்பூர் உடனான விமான சேவைகளை உடனடியாக மத்திய அரசு ரத்துசெய்ய வேண்டும் என பதிவிட்டிருந்தார். 


சிங்கப்பூரில் சமீபத்திய வாரங்களில் குழந்தைகள் உள்பட பலருக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்புகளில் பி .1.617.2 புதிய வகை தொற்று பாதிப்பு உள்ளது என்பதை பைலோஜெனடிக் சோதனை காட்டுகிறது. ஆனால் இது இந்தியாவில் தோன்றியது  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நன்கு தெரிந்து கொள்ள வேண்டியவர்களின் பொறுப்பற்ற கருத்துக்கள் நீண்டகால நட்புகளை சேதப்படுத்தும்.  கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் சிங்கப்பூரும் இந்தியாவும் இணைந்து செயல்பட்டன, இருப்பினும், நன்கு தெரிந்து கொண்டு பேசவேண்டியவர்களின் பொறுப்பற்ற கருத்துக்கள், நீண்டகால ஒத்துழைப்பை பாதிக்கும் என இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கூறினார். சிங்கப்பூர் மரபணு மாற்ற கொரோனா வைரஸ் குறித்த டெல்லி முதல்வரின் டுவிட்டிற்கு கடும் ஆட்சேபனை தெரிவிக்க சிங்கப்பூர் அரசு இன்று இந்திய தூதரை  அழைத்தது. மரபணு மாற்ற கொரோனா வைரஸ் அல்லது சிவில் விமானக் கொள்கை குறித்து பேச டெல்லி முதல்வருக்கு எந்த அதிகாரமும்  இல்லை என தெரிவித்தார். 



Tags : Delhi ,Chief Minister ,India ,Singapore ,Foreign Minister , Singapore Minister of Genetics, Corona Virus, Controversy and Foreign Affairs
× RELATED ஈடி, சிபிஐ நடவடிக்கை குறித்த...