×

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் திடீரென உள்வாங்கிய கடல்!: படகை செலுத்த முடியாமல் மீனவர்கள் அவதி..!!

தஞ்சை: தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடல் திடீரென 200 மீட்டருக்கு உள்வாங்கியதால் படகுகளை செலுத்த முடியாமலும், கரை திரும்ப முடியாமலும் மீனவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். அதிராம்பட்டினம் கடற்பகுதியில் கடந்த சில நாட்களாக கடுமையாக சூறைக்காற்று வீசி வந்தது. கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்த நாட்டு படகு மீனவர்கள், இதனால் மீன்பிடிக்க முடியாமல் பாதியிலேயே திரும்பிவிட்டனர். இந்நிலையில், இன்று காற்று குறைவாக இருந்ததால் கடலுக்கு புறப்பட்ட ஏரி புரக்கரை கிராம மீனவர்கள், கடல் சுமார் 200 மீட்டர் தூரம் உள்வாங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 


எந்த நேரமும் தண்ணீர் இருக்கும் துறைமுக வாய்க்கால் தண்ணீரே இல்லாமல் வறண்டுபோய் காணப்பட்டது. தண்ணீர் இன்றி தரைதட்டிய படகுகளை வேறு வழியின்றி நீண்ட தூரம் இழுத்து சென்று மிகுந்த சிரமத்திற்கிடையே கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். தொடர்ந்து, மீன்பிடித்துவிட்டு திரும்பியபோதும் கடல் உள்வாங்கி இருந்ததால் மீனவர்கள் தாமதாக கரை திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது. 



Tags : Tanjore District Adirampattinam , Tanjore, Adirampattinam, Inland Sea
× RELATED யானை தாக்கி விவசாயி பலி