×

சிதற தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சி; முக்கிய பொறுப்பாளர்கள் கட்சியில் இருந்த விலகல்: கலக்கத்தில் கமல்ஹாசன்

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி பொதுச்செயலாளர் முருகானந்தம் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்து விலகியுள்ளார். கமல்ஹாசனின் சர்வாதிகார போக்கினால் தேர்தலில் தோல்வியடைந்ததாக முருகானந்தம் குற்றம் சாட்டினார். கூட்டணிக் கட்சிகளுக்கு 100 தொகுதிகளை ஒதக்கியதே தோல்விக்கு காரணம் என முருகானந்தம் திருச்சியில் பேட்டியளித்தார். அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட தமது கட்சியில் ஆள் இல்லை என கமல் கூறியது உறுத்தலாக உள்ளது என தெரிவித்தார். முருகானந்தத்துடன் திருச்சி மாவட்ட மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் 2,200 பேர் கட்சியில் இருந்து விலகியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மக்கள் நீதி மய்யத்தின் மதுரவாயல் தொகுதியில் போட்யிட்ட பத்மப்ரியா கட்சியில் இருந்து விலகினார். 


அன்பு நிறைந்த மதுரவாயல் தொகுதி மக்களுக்கு என் மீது நம்பிக்கை கொண்டு எனக்கு வாக்களித்த மக்கள் அனைவருக்கும் எனது நன்றி என தனது ட்வீட்டரில் பதிவிட்டார். சில காரணங்களுக்காக நான் சார்ந்திருந்த மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளேன் என குறிப்பிட்டார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணை தலைவர் மகேந்திரன் கடந்த மே 6-ம் அக்கட்சியில் இருந்து விலகினார். மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் சிலர் தங்கள் வகித்த பதவிகளில் இருந்து விலகியுள்ளனர். துணை தலைவர் மகேந்திரன், பொன்ராஜ், பொதுச்செயலாளர் சந்தோஷ் பாபு, சிகே. குமரவேல் மவுரியா ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.



Tags : Kamallhassan , Manima Party, Dissociation, Kamalhasan
× RELATED நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான...