சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் வீடு திரும்புவார்: தேமுதிக அறிக்கை

சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த் சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என தேமுதிக அறிக்கை அனுப்பியுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் திடீர் மூச்சுத்திணறல் காரணமாக, அதிகாலை 3:30 மணியளவில் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

தொடா்ந்து அவரது உடல்நிலையை மருத்துவா்கள் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், வழக்கமாக மேற்கொள்ளப்படும் பரிசோதனைக்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிகிச்சை முடிந்து ஓரிரு தினங்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories:

More
>