எமிலியா ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் செரீனா

பார்மா: இத்தாலியில் நடைபெறும் எமிலியா - ரோமாக்னா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, அமெரிக்க நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸ் தகுதி பெற்றார். முதல் சுற்றில் உள்ளூர் வீராங்கனை லிசா பிகாடோவுடன் மோதிய செரீனா 6-3, 6-2 என்ற நேர் செட்களில் எளிதாக வென்றார். இப்போட்டி 1 மணி, 8 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. மற்றொரு முதல் சுற்றில் செரீனாவின் சகோதரி வீனஸ்  வில்லியம்ஸ் 7-5, 2-6, 2-6 என்ற செட் கணக்கில் ஸ்லோவகியாவின் அன்னா கரோலினாவிடம் தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறினார். இப்போட்டி 2 மணி, 39 நிமிடத்துக்கு நீடித்தது. முன்னணி வீராங்கனைகள் கரோலின் கார்சியா  (பிரான்ஸ்), ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா), கேதரினா சினியகோவா (செக்.), கேமிலா ஜார்ஜி (இத்தாலி) ஆகியோரும் 2வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

Related Stories: