கொரோனா நிவாரண நிதிக்கு நளினி ரூ.5 ஆயிரம் வழங்கினார்

வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் பெண்கள் தனிச்சிறையில், ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, கொரோனா நிவாரண நிதியாக தனது சிறைவாசி வைப்பு நிதியில் இருந்து ரூ.5 ஆயிரத்தை  முதலமைச்சர் நிவாரண நிதியாக வழங்க முடிவு செய்தார்.  இதற்கான கடிதத்தை நளினி சிறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினியிடம் நேற்று வழங்கினார். அதை ஏற்று அவரது வைப்பு தொகையில் இருந்து ரூ.5 ஆயிரம் முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பப்படும் என்று சிறை கண்காணிப்பாளர்  ருக்மணி தெரிவித்தார்.

Related Stories:

More
>