×

தனியார் மருத்துவமனைகள் ரெம்டெசிவிர் மருந்து வாங்க இணையத்தில் பதிவு செய்யலாம்: கவுன்டர்களில் விற்பனை தொடக்கம்..அரசு அறிவிப்பு

சென்னை: ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படும் இடங்களில் அதிக கூட்டம் கூடுவதால், சமூக இடைவெளியை கடைபிடிக்கமுடியாத சூழல், இதன் மூலம் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்களின்  சிரமத்தைக் குறைக்கும் வகையிலும், தற்போதுள்ள முறையை மாற்றி மருத்துவமனைகள் மூலமாக மட்டுமே இந்த மருந்தை வழங்கிட வேண்டுமென்று முதல்வர் அறிவுறுத்தினார். இதன்படி, நேற்று (18ம் தேதி) முதல் தமிழகத்திலுள்ள  அனைத்து தனியார் மருத்துவமனைகளும், தமது மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குறித்த விவரங்களோடு, மருந்து தேவை குறித்த தமது கோரிக்கைகளை இணையதளத்தில் பதிவிடும் வசதி  ஏற்படுத்தப்படும்.

தனியார் மருத்துவமனைகளின் கோரிக்கைகளைப் பரிசீலித்து இந்த மருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டபின், அந்த மருத்துவமனையின் பிரதிநிதிகள் மட்டும், அவர்களுக்கான விற்பனை மையங்களுக்குச் சென்று ஒதுக்கீடு  செய்யப்படும் மருந்துகளைப் பெற்றுக் கொள்ளலாம். இதற்கான இணையதளம் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என அரசால் தெரிவிக்கப்பட்டது.  இந்நிலையில், தமிழ்நாடு மருத்துவ பணி கழகம் தனியார் மருத்துவனைகள் ரெம்டெசிவிர் மருந்தின் தேவைக்கேற்ப அந்த இணையதளத்தின் மூலம் பதிவு செய்து, அதனடிப்படையில் பணம் செலுத்தி, மருந்துகளை பெற்று நோயாளிகளுக்கு  கொடுக்க வேண்டும். அதற்கான இணையதள முகவரியை (tnmsc.tn.gov.in) தமிழ்நாடு மருத்துவ பணி கழகத்தின் மூலம் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்த இணையதளத்தின் வாயிலாக மருத்துவமனையின் பெயர், நோயாளிகள்  விவரங்கள், அவருக்கான மருந்தின் தேவை உள்ளிட்டவைகளை தனியார் மருத்துவமனைகள் பதிவு செய்ய வேண்டும் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags : Private hospitals can register online to buy Remtacivir: Counter sales start..Government announcement
× RELATED எரிந்த நிலையில் பெண் சடலம்: கொலையா என விசாரணை