‘தூங்கும் மத்திய அரசை எழுப்புங்கள்’: ராகுல்காந்தி விமர்சனம்

புதுடெல்லி: இந்தியாவில் மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது என மருத்துவ ஆய்வாளர்கள் கூறி உள்ளனர். இதனால், இப்போதே குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்க வேண்டியது அவசியம் என அரசுக்கு  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது டிவிட்டர் பதிவில், ‘இனிவரும் நாட்களில் கொரோனா நோய் தொற்றில் இருந்து குழந்தைகளுக்கு பாதுகாப்பு அவசியமாகும். எனவே குழந்தைகளுக்கான சேவைகள் மற்றும்  தடுப்பூசி சிகிச்சை முறை தயாராக இருக்க வேண்டும். இந்தியாவின் எதிர்காலத்திற்காக, பிரதமர் மோடியின் சுகாதார சிஸ்டத்தை தூக்கத்தில் இருந்து தட்டி  எழுப்ப வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: