கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து சட்டமன்ற குழு உறுப்பினர்களுடன் நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற குழு நாளை ஆலோசனையில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துசட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் கடந்த 13ம் தேதி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில், நோய்த்தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்  குறித்த ஆலோசனைகளை வழங்க சட்டமன்ற கட்சிகளைச் சார்ந்த  உறுப்பினர்களை கொண்ட  ஒரு ஆலோசனை குழு அமைக்கலாம் என தீர்மானிக்கப்பட்டது. இந்த தீர்மானத்தின் அடிப்படையில் அனைத்து சட்டமன்ற கட்சிகளின் தலைவர்களிடம் பெறப்பட்ட பரிந்துரையின் அடிப்படையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனைக் குழுவில் 13 கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும், இந்த ஆலோசனை குழு தோய்த் தொற்றுப்  பரவலைக் கட்டுப்படுத்தும்   வழிமுறைகள் குறித்து அவ்வப்போது கூடி விவாதிக்கும்.

இக்குழுவிற்கு பொதுத்துறை செயலாளர் உறுப்பினர் செயலாளராக செயல்படுவார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த குழு அமைக்கப்பட்டதையடுத்து நாளை இந்த குழுவினருடன் முதல்வர் ஆலோசனை நடத்தவுள்ளார். அதன்பிறகு அவர்கள் வழங்கும் ஆலோசனையின் அடிப்படையில் அடுத்த கட்ட முடிவுகள், கொரோனாவை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகள், வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories:

>