கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் ரெம்டெசிவிர் மருந்து பெற மருத்துவ பணிகள் கழகம் சார்பில் இணையதளம் தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்து பெற மருத்துவ பணிகள் கழகம் சார்பில் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. tnmsc.tn.gov.in என்ற இணையதளத்தில் தனியார் மருத்துவமனைகள் விண்ணப்பித்து ரெம்டெசிவிர் பெறலாம் என கூறப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளின் விவரங்களை பதிவேற்றம் செய்து தனியார் மருத்துவமனைகள் ரெம்டெசிவிர் பெறலாம் என கூறப்பட்டுள்ளது. தமிழக அரசு மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. 

மேலும், தனியார் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு, தற்போது தனியார் மருத்துவமனைகள் மூலமாகவும், சென்னை, கோவை, சேலம், திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய இடங்களில் உள்ள விற்பனை மையங்களில் நேரடியாக நோயாளிகளின் குடும்பத்தினர் மூலமாகவும் இந்த மருந்து வழங்கப்பட்டு வருகிறது.இதற்கிடையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படும் இடங்களில், அதிக கூட்டம் கூடுவதால், சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 

இங்கு மருந்துகளைப் பெறுவோர் சிலர், அவற்றைத் தவறான முறையில் அதிக விலையில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வது குறித்த புகார்களும் எழுந்துள்ளன. தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தின் //tnmsc.tn.gov.in என்ற இணையதளத்தில், தனியார் மருத்துவமனைகள் ரெம்டெசிவிர் மருந்து பெற பதிவு செய்யலாம். இதில் பதிவு செய்த பின்னர், தனியார் மருத்துவமனைகள் தங்கள் பிரதிநிதிகளை அனுப்பி மருந்தை பெற்றுக் கொள்ளலாம் என கூறியுள்ளது.

Related Stories:

>