×

15 அடி உயர இரும்பு கேட் விழுந்து ஐசிஎப் அதிகாரி, ரயில்வே காவலர் பலி

சென்னை: சென்னை ஐ.சி.எப்.பில் 15 அடி உயர நுழவைாயில் இரும்பு கேட் விழுந்து ரயில்வே காவலர் மற்றும் ஐசிஎப் அதிகாரி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை ஐ.சி.எப் வளாகத்தில் உள்ள பர்னிசிங் பிரிவில் நேற்று மாலை 7 மணி அளவில் லோடு இறக்கி விட்டு வாகனம் திரும்பி சென்றது. அதன் பிறகு நுழைவாயில் கேட்டை முடியபோது, கேட்டின் அடிப்பகுதியில் பழுது ஏற்பட்டதால், ஒரு பகுதி வீல் அச்சிலிருந்து சரிந்து திடீரென கீழே விழுந்தது. அப்போது, கேட்டின் அருகே நின்று கொண்டிருந்த சீனியர் இன்ஜினியர் நற்குணன் (55) மற்றும் ஆர்.பி.எப் காவலர் லட்சுமணன் (41) ஆகிய இருவரும் கேட்டின் கிழே சிக்கி படுகாயமடைந்தனர்.

அவர்களது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த சக ஊழியர்கள் ஓடி வந்து, படுகாயமடைந்த இருவரையும் மீட்டு ஐசிஎப் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், வழியிலேயே நற்குணன்  இறந்தார். ரயில்வே காவலர் லட்சுமணன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து ஐசிஎப் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : ICF , ICF officer, railway guard killed after 15-foot high iron gate falls
× RELATED 250 ரயில்வே ஊழியர்கள் கைது