×

ஆங்கில, சித்த மருந்துகளை இணைத்து கொடுத்தால் கொரோனாவை கட்டுப்படுத்தலாம்: சித்த மருத்துவர் சாய் சதீஷ் பேட்டி

சென்னை:  ஆங்கிலம் மற்றும் சித்த மருந்துகளை இணைத்து கொடுத்தால் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தலாம் என்று சித்த மருந்துவர் சாய் சதீஷ் கூறியுள்ளார். கொரோனா பரவலை தடுக்க மக்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சித்த மருத்துவர் சாய் சதீஷ் அளித்த பேட்டி:  இரண்டாம் அலையை கட்டுப்படுத்த சித்தாவில் கபசுர குடிநீரை தவிர வேறு என்ன மாதிரியான மருந்துகள் உள்ளன? 2ம் அலையில் கொரோனா உருமாற்றம் அடைந்து தீவிரமாக இருக்கிறது. எனவே, அதற்கேற்றார் போல் மருந்துகளிலும் மாற்றம் செய்தால் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. கபசுர குடிநீரும், நிலவேம்பு குடிநீரும் சேர்ந்து எடுக்கும்போது நாம் கொரோனா வரவிடாமல் தவிர்க்கலாம். இரண்டு பொடிகளையும் தலா ஒரு டீஸ்பூன் சேர்த்து அதை கொதிக்க விட்டு வடிகட்டி குடிக்க வேண்டும்.ஆக்சிஜன் அளவை அதிகப்படுத்த என்ன வழி?

ஆக்சிஜன் அளவை அதிகப்படுத்த சிறந்த உணவு லவங்கம் தான். ஓராக் வேல்யு அதிகம் இருப்பது லவங்கத்தில் தான். தொற்று ஆரம்ப நிலையில் இருக்கும் போது மூச்சுப்பயிற்சி செய்வது நல்லது. மேலும் மருத்துவர்கள் அறிவுரை பெற்று அவர்கள் பரிந்துரைக்கும் சித்த மருந்துகளை சாப்பிடலாம். கண்டிப்பாக 80 முதல் 95 வரையில் ஆக்சிஜன் அளவு இருப்பவர்களை சித்த மருத்துவத்தின் உதவியோடு காப்பாற்ற முடியும்.குழந்தைகளுக்கு சித்த மருந்துகளை கொடுக்கலாமா?
குழந்தைகளுக்கு தாராளமாக கொடுக்கலாம். காய்ச்சல் உச்சநிலை இருக்கும் போது பாராசிட்டமால் கொடுத்து குரோசனி மாத்திரை, கஸ்தூரி மாத்திரை, உறை மாத்திரை போன்ற எதாவது ஒன்றில் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு மருத்துவரின் அறிவுரையின் கீழ் இந்த மாத்திரையை கொடுக்கலாம்.

கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் சித்த மருந்துகளை எடுக்கலாமா? தடுப்பூசி போட்டவர்கள் ஒரு நாள் கழித்தே கசாயம் போன்ற சித்த மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம். பக்க விளைவுகள் எதுவும் வராது. கொரோனா வராமல் தடுக்க மக்கள் என்ன மாதிரியான சித்த மருந்துகளை முன்னெச்சரிக்கையாக எடுக்கலாம்? சாதாரண மக்கள் கபசூர குடிநீர், நிலவேம்பு குடிநீர் ஆகிய இரண்டையும் தொடர்ந்து 10 நாட்கள் எடுக்க வேண்டும். இப்படி எடுக்கும்போது தொற்று வராமல் தடுக்க முடியும். இந்த தொற்று என்பது ஒரு அம்மை நோய் போன்றது தான்.  ஆங்கிலம் மற்றும் சித்த மருந்துகளை சேர்த்து எடுத்துக்கொண்ட எத்தனை பேர் குணமாகியுள்ளனர்?முதல் அலையின் போது 2,800 பேர் குணமடைந்துள்ளனர்.

இனிவரும் காலங்களில் தொற்றின் தீவிரம் குறையுமா? இந்த வைரசின் தாக்கம் மார்ச், ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 4 மாதங்கள் மட்டும் தான் இருக்கும். அதன்பிறகு வைரசின் தாக்கம் குறைந்துவிடும். தற்போது டெல்லியில் குறைந்து வருகிறது. தமிழகத்தில் ஜூன் இறுதிக்குள் குறைந்துவிடும். எனவே, மக்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பது சிறந்தது. ஆரம்பநிலைக்கு சித்த மருத்துவம் சிறந்தது. அவசர நிலைக்கு நவீன மருத்துவம் தான் சிறந்தது. இந்த இரண்டும் சேர்ந்து செயல்பட்டால் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் என்றார்.



Tags : Sai Satish , Corona can be controlled by combining English and paranormal drugs: Interview with Psychiatrist Sai Satish
× RELATED வைரசை கட்டுப்படுத்த சிறந்தது சித்த...