×

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதி!: ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். கூட்டாக அறிவிப்பு..!!

சென்னை: தமிழ்நாடு அரசின் கொரோனா நோய் தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ரூ.1 கோடி வழங்கப்படும் என அக்கட்சி அறிவித்துள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இது தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ வசதிகளை ஏற்படுத்தவும், நிவாரண பணிகளுக்காகவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்குவதாக தெரிவித்துள்ளனர். 


கொரோனா பெருந்தொற்றால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி தரவும், உரிய வழங்கவும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய் அளிக்கப்படும். மேலும் அதிமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் தாங்கள் ஒரு மாத ஊதியமும் கொரோனா நிவாரண பணிகளுக்கென முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என அவர்கள் கூறியுள்ளனர். 


இப்பெருந்தொற்றின் முதல் அலை மக்களை தாக்கிய நேரத்தில் கடந்த ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் தமிழ்நாடு அரசிடம் 1 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இப்பொழுது அரசிடம் கழகத்தின் சார்பில் 1 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி ஆங்காங்கே கட்சியினர் தங்களால் இயன்ற நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். 



Tags : Chief Minister Relief Fund ,O. RB S. ,E. RB S. , Chief Minister's Relief Fund, AIADMK, Finance
× RELATED 'பசும்பொன் தேவர் குருபூஜையை ஓ.பி.எஸ்.,...