நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

மேட்டுப்பாளையம் :  டவ்-தே புயல் காரணமாக பவானி மற்றும் சிறுவாணி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை கடந்த 2 நாட்களாக பெய்து வருகிறது.

குறிப்பாக தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள அட்டப்பாடி, அட்டப்பாடி-பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக, மேட்டுப்பாளையம் பில்லூர் அணைக்கு நீர் வரத்து நேற்று இரவு 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 4 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.

இதனால், 83 அடியாக பில்லூர் அணையின் நீர்மட்டம் தற்போது 86 அடியாக உயர்துள்ளது.இந்நிலையில், அணையில் 2 ஜெனரேட்டர்கள் மூலம் மின் உற்பத்தி செய்வதன் மூலம் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மழை 2 நாட்களுக்கு நீடிக்கும் என்பதால் அணையின் நீர்மட்டம் உயரக்கூடிய வாய்ப்பு உள்ளது. இதனால் கோவை, திருப்பூர் பகுதிகளுக்கு செயல்படுத்தக்கூடிய குடிநீர் திட்டங்களுக்கு தேவையான தண்ணீர் தடையின்றி கிடைக்கும் நிலை உருவாகி உள்ளது.

Related Stories:

>