×

உலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 33.92 லட்சம் பேர் பலி... இந்தியாவில் தொடரும் மரண ஓலம்

ஜெனீவா : உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 16.37 கோடியாக உயர்ந்துள்ளது.உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16.31 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 16,3709076 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 14,21,61,325 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 33 லட்சத்து 92 ஆயிரத்து 944 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 1,81,54,807 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,02,478 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா - பாதிப்பு - 3,37,15,951,  உயிரிழப்பு - 6,00,147, குணமடைந்தோர் -  2,71,36,020
இந்தியா   - பாதிப்பு - 2,49,64,925,  உயிரிழப்பு - 2,74,411,  குணமடைந்தோர் -  2,11,67,609
பிரேசில்  -  பாதிப்பு - 1,56,27,475,  உயிரிழப்பு - 4,35,823,  குணமடைந்தோர் -  1,40,97,287
பிரான்ஸ் -  பாதிப்பு -  58,77,787,  உயிரிழப்பு -  1,07,616, குணமடைந்தோர் -   51,16,705
துருக்கி  -  பாதிப்பு -  51,17,374,  உயிரிழப்பு -    44,760, குணமடைந்தோர் -   49,47,256

Tags : India ,Olam , Globally, corona virus attack has killed 33.92 lakh people so far ... Death toll continues to rise in India
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...