இந்தியா, இங்கிலாந்து வகை உருமாற்ற வைரசையும் கோவாக்சின் எதிர்க்கும்

புதுடெல்லி: இங்கிலாந்து மற்றும் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள புதிய உருமாற்ற கொரோனா வைரசையும் கோவாக்சின் தடுப்பூசி எதிர்க்கும் திறன் கொண்டது என ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்தியா உட்பட 44 நாடுகளில்பரவியுள்ள மிகுந்த வீரியமிக்க இந்திய வகை இரட்டை உருமாற்ற வைரசுக்கு எதிராக கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் குறைவான செயல்திறனை கொண்டிருப்பதாக சமீபத்தில்ஆய்வு முடிவுகள்  வெளியாகின. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், உள்நாட்டு தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசியானது இங்கிலாந்தில் மாற்றமடைந்த பி.1.1.7 வகை மற்றும் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பி.1.617 வைரஸையும் எதிர்க்கும் திறன்கொண்டது என புதிய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.  இந்திய தேசிய வைராலஜி நிறுவனமும், இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சிலும் நடந்த இந்த ஆய்வில், கோவாக்சின் செயல்திறன் கொண்டதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து கோவாக்சினை தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் இயக்குநர் சுசித்ரா எல்லா தனது டிவிட்டரில், ‘‘கோவாக்சின் தடுப்பூசி இந்திய, இங்கிலாந்து வகை உருமாறிய வகைகளுக்கு எதிராகவும் முழுமையாக செயல்படுகிறது  எனக் கூறப்பட்டுள்ளது. இது, கோவாக்சின் தடுப்பூசிக்குச் சர்வதேச அளவில் கிடைக்கும் மற்றொரு அங்கீகாரம்’’ என கூறி உள்ளார். இந்த ஆய்வு முடிவு க்ளினிக்கல் இன்பெக்‌ஷியஸ் டிசீஸ் மருத்துவ இதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.

முன்பதிவு செல்லும்

கோவிஷீல்டு தடுப்பூசிக்கான இரண்டாம் டோஸ் 84 நாட்களுக்குள் பெற வேண்டும் என்று நிபுணர்கள் முன்பு அறிவித்திருந்தனர். ஆனால், தற்போது இந்த கால அளவு 12 முதல் 16 வாரங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் இரண்டாம்  டோஸுக்காக ஏற்கனவே கோவின் இணையதளம் வழியே பதிவு செய்திருந்தவர்கள் குழப்பம் அடைந்தனர். இதற்கு விளக்கமளித்திருக்கும் மத்திய சுகாதார அமைச்சகம், ‘இரண்டாம் டோஸ் 84 நாட்களுக்குள் போட வேண்டும் என்று பதிவு  செய்திருந்தவர்களின் பதிவு ரத்தாகவில்லை. முதல் டோஸ் போட்டுக் கொண்ட தேதியிலிருந்து 16 வாரங்கள் வரையிலான ஏதேனும் ஒரு தேதியில் இரண்டாம் டோஸை எடுத்துக் கொள்ளலாம்’ என்று கூறியுள்ளது.

Related Stories:

More
>