×

குரோம்பேட்டையில் 150 படுக்கைகளுடன் சித்த மருத்துவமனை: ஊரக தொழில்துறை அமைச்சர் ஆய்வு

தாம்பரம்: தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டம் கொரோனா பாதிப்பில் இரண்டாவது இடத்தில் உள்ளது. எனவே, செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக  முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்துதலின்படி பல்வேறு இடங்களில் கொரோனா சிகிச்சைக்காக படுக்கை வசதியுடன், கொரோனா சிறப்பு மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

 அதன் ஒரு பகுதியாக குரோம்பேட்டையில் உள்ள  தனியார் கல்லூரியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சுமார் 150 படுக்கைகள் கொண்ட சிறப்பு சித்த மருத்துவமனை தமிழக அரசு சார்பாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு மருத்துவமனையை, ஊரக தொழில்துறை அமைச்சர்  தா.மோ.அன்பரசன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், இந்த சித்த மருத்துவமனை வரும் 19ம் தேதி, திறக்கப்படும் என அவர்  தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் மற்றும் அரசு அதிகாரிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.  


Tags : Crompton ,Minister of Rural Industries , Paranormal hospital with 150 beds in Crompton: Study by the Minister of Rural Industries
× RELATED பல்லாவரம், குரோம்பேட்டை பகுதியில்...