திருச்சி, மன்னார்குடி ரயில்கள் ரத்து

சென்னை: குறைவான பயணிகள் எண்ணிக்கை காரணமாக 8 ரயில்களை தற்காலிகமாக ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘குறைவான பயணிகள் எண்ணிக்கை காரணமாக 8 ரயில்களை ரத்து செய்யப்படுகிறது. அதன்படி இன்று (17ம் தேதி) முதல் 31ம் தேதி வரையில் சென்னை எழும்பூர்-மன்னார்குடி,  கன்னூர்-கோவை, கோவை-கன்னூர், ஆலப்புழா-கன்னூர், கன்னூர்-ஆலப்புழா, சென்னை எழும்பூர்-திருச்சி, திருச்சி-சென்னை எழும்பூர் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் நாளை (18ம் தேதி) முதல் ஜூன் 1ம் தேதி வரையில் மன்னார்குடி-சென்னை ரயில் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது’ எனக்கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>