×

தேசிய கல்விக்கொள்கை தொடர்பாக அமைச்சர், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதே ஏற்புடையதாக இருக்கும் : பள்ளிக்ல்வித்துறை அமைச்சர்

சென்னை: தேசிய கல்விக்கொள்கை தொடர்பாக அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதே ஏற்புடையதாக இருக்கும் என்று அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு வடிவமைத்த  கல்விக் கொள்கை-2020 -க்கு மத்திய அரசு கடந்த ஆண்டு ஒப்புதல் வழங்கியது. தேசிய கல்விக் கொள்கை அனைவருக்கும் சென்று சேரும் வகையில், மத்திய அரசு அதனை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டு இருந்தது. 2021-ம் ஆண்டுக்குள் கல்விகொள்கையை அமல்படுத்த அறிவுறுத்தியுள்ளது. இந்த சூழலில் தேசிய கல்விக்கொள்கையை அமல் செய்வது குறித்து மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக நாளை அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களுடன் மத்திய கல்வித்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் ஆலோசனை நடத்த உள்ளார்.


இந்நிலையில், தேசிய கல்விக்கொள்கை தொடர்பாக அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதே ஏற்புடையதாக இருக்கும் என்று மத்திய கல்வித்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியாலுக்கு தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பான அந்த கடிதத்தில், தேசிய கல்வி கொள்கை தொடர்பாக மாநில அரசின் கருத்துக்களை எடுத்துரைக்க தயாராக உள்ளோம் என்றும், தேசிய கல்விக்கொள்கை தொடர்பாக அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதே ஏற்புடையது என்றும் அதில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.



Tags : National Education Policy, with High Officials, Consulting, Minister of School Education
× RELATED சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு...