அதிமுக தோல்விக்கு மெத்தனமே காரணம் : முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு

திருமங்கலம் : தேர்தல் களப்பணியில் கட்சியினர் சோர்வுடன் செயல்பட்டதால்தான் அதிமுக தோல்வியடைந்ததாக முன்னாள் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே குன்னத்தூர் ஜெயலலிதா கோயிலில், நடந்த கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் தொகுதி அதிமுக எம்எல்ஏவுமான உதயகுமார் பங்கேற்றார்.நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: நடந்து முடிந்த தேர்தலில் பல தொகுதிகளில் 5 ஆயிரம், 10 ஆயிரம் வாக்குகளில் அதிமுக தோல்விடையந்து ஆட்சியை இழந்துள்ளது. இதற்கு கட்சியினர் சோர்வுடன் சற்று மெத்தனமாகவும் செயல்பட்டதும் காரணமாகும். ஒரு ஓட்டில் வென்றாலும் வெற்றி வெற்றிதான். எனவே முன்பேவிட களப்பணியில் தொண்டர்கள் வேகம் காட்ட வேண்டும். கட்சிப்பணி, சேவைப்பணியில் வெற்றி பெற்ற நாம் தேர்தல் களப்பணியில் பின்தங்கி விட்டோம். அதனை சரி செய்யவேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories:

>