வாஷிங்டன்: அமெரிக்காவின் புதிய அதிபரான ஜோ பைடன் தனது அரசு நிர்வாகத்தில் இந்தியா வம்சாவளியை சேர்ந்தவர்களுக்கு அதிக வாய்ப்புக்களை வழங்கி வருகின்றார். கடந்த மார்ச்சில் வெள்ளை மாளிகையின் மேலாண்மை மற்றும் நிதிக்குழுவின் தலைவரான இந்திய வம்சாவளி பெண்ணாண நீரா தாண்டன் நியமிக்க அதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்தார். ஆனால் செனட் சபையில் அவருக்கு போதுமான வாக்குகள் கிடைக்காததால் அவர் தோல்வி அடைந்தார். இந்நிலையில் அதிபர் ஜோ பைடனின் மூத்த ஆலோசகராக தற்போது நீரா தாண்டன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே அமெரிக்க முன்னேற்றத்திற்கான மையத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவி வகித்துள்ளார். மேலும் அமெரிக்க முன்னேற்ற நடவடிக்கை நிதி மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருந்துள்ளார்.