முதுநிலை கோயில் பணியாளர்கள் ஒரு நாள் ஊதியம் வழங்க முடிவு

சென்னை: தமிழ்நாடு முதுநிலை திருக்கோயில் பணியாளர் சங்க தலைவர் ஷாஜிராவ் அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: முதல்வர் பொது நிவாரண நிதிக்கு விருப்பம் உள்ளவர்கள் உரிய நிதியினை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 47 முதுநிலை கோயில்களில் பணிபுரியும் சுமார் 3,500க்கும் மேற்பட்ட கோயில் பணியாளர்களின் (2021 மே மாதம்) ஒரு நாள் ஊதியத்தினை (சுமார் ₹50 லட்சம்) எங்களது சிறப்பு பங்களிப்பாக கொரோனா சிகிச்சைக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள், நோய் தடுப்பு மருந்துகள் கொள்முதல் செய்வதற்கும் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான நிதியினை வழங்கும் வகையில் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்க எங்களது இசைவினை தெரிவித்துக் கொள்கிறோம்.

Related Stories:

>