பாஜக அரசின் விளையாட்டுக்கு மருத்துவ நிபுணர்களும், விஞ்ஞானிகளும் பலியாகக் கூடாது: ப.சிதம்பரம் ட்வீட்

சென்னை: பாஜக அரசின் விளையாட்டுக்கு மருத்துவ நிபுணர்களும், விஞ்ஞானிகளும் பலியாகக் கூடாது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். தடுப்பூசி விஷயத்தில் மருத்துவ நிபுணர்களும், விஞ்ஞானிகளும் உண்மையை கூற வேண்டும். கோவிஷீல்டு தடுப்பூசியின் 1-வது, 2-வது டோஸ் இடையே 12 - 16 வார இடைவெளி தேவை என மத்திய அரசு கூறியது. 50 வயதை கடந்தவர்களுக்கு 8 வார இடைவெளி தேவை என பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. மத்திய பாஜக அரசு மருத்துவ நிபுணர்கள், விஞ்ஞானிகள் மீது பழியைத் திருப்பிவிடக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: