×

ரம்ஜான் பண்டிகை தினத்தில் களை இழந்த நாகூர் தர்கா

நாகை: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரம்ஜான் பண்டிகை தினத்தில் நாகூர் தர்கா களையிழந்து காணப்பட்டது. கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு வரும் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி இல்லை. ரம்ஜான் பண்டிகை தினத்தில் இஸ்லாமியர்கள் புகழ்பெற்ற நாகூர் தர்கா, சில்லடி தர்கா உள்ளிட்ட இடங்களில் தொழுகை நடத்துவது வழக்கம். ஆனால் ஊரடங்கு உத்தரவின் காரணமாக நேற்று நாகூரில் தொழுகை நடைபெறவில்லை.

இதனால் நாகூர் தர்கா வெறிச்சோடி காணப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உலக மக்களை பாதுகாக்க வேண்டி பூட்டப்பட்டு இருந்த தர்காவின் கால்மாட்டு வாசலில் நின்று முககவசம் அணிந்து பிரார்த்தனை செய்தனர். ஒரு சிலர் தங்களது வீடுகளில் சமூக இடைவெளியை பின்பற்றி குடும்பத்தினரோடு சிறப்பு தொழுகை நடத்தினர்.

நாகை மாவட்டத்தில் நாகூர், நாகை, திட்டச்சேரி, வடகரை, வவ்வாலடி, ஆழியூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள 48 பள்ளிவாசல்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெறவில்லை. இதற்கு பதில் வீடுகளிலேயே எளிமையாக தொழுகை நடத்தி பண்டிகையை கொண்டாடினர்.

Tags : Nagore tarka ,Ramjan , Nagore Dargah loses weeds on Ramadan
× RELATED ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு...