இந்திய ரசிகர்கள் பதிலடி: ஆஸி. டிம் பெய்ன் பல்டி

சிட்னி: ‘இந்தியா திசை திருப்பி எங்களிடம் வெற்றிப் பெற்றது’ என்று சொன்ன ஆஸி கேப்டன் டிம் பெய்ன், ரசிகர்கள் விமர்சன பதிலடிகளால் ‘அந்த வெற்றிக்கு இந்தியா தகுதியானது’ என்று பல்டி அடித்துள்ளார்.‘திசை திருப்பி வெற்றி பெறுவதில் இந்தியர்கள் வல்லவர்கள். அதனால் உள்ளூரில் அவர்களிடம் டெஸ்ட் தொடரை இழந்தோம்’ என்று ஆஸி டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெய்ன் நேற்று முன்தினம் புலம்பியிருந்தார். அது சமூக வலை  தளங்களில் வைரலாக இந்திய ரசிகர்கள்  அவரை கடுமையாக  விமர்சனம் செய்து வருகின்றனர்.

இப்படி வெளிப்படையான கலாய்ப்புகளுக்கு பதில் சொல்ல முடியாமல் டிம் பெய்ன்  திணறிவருகிறார். இந்நிலையில் நேற்று அவர், ‘இந்திய  ரசிகர்கள் சமூக ஊடகங்களில் என்னை அவதூறாக பேசி வருகின்றனர். இந்தியாவுக்கு எதிரான சவால் குறித்த கேட்ட கேள்விக்குதான் நான் பதில் சொன்னேன். கூடவே இந்தியா அந்த வெற்றிக்கு தகுதியானது என்று சொன்னதை  விட்டுவிட்டார்கள். எங்கள் தோல்விக்கு நான் சாக்கு போக்கு சொல்வதாக  சொல்கிறார்கள். அது வேடிக்கையாக இருக்கிறது. நான் இந்திய ரசிகர்களை நேசிக்கிறேன். நான் தவறவிட்ட ‘கேட்ச்’களுக்காக என்னை விமர்சிக்கிறார்கள் அது  நியாயமானது.

அவர்கள் எவ்வளவு கிரிக்கெட்டை விரும்புகிறோர்களோ, அது அளவுக்கு நானும் கிரிக்கெட்டை  நேசிக்கிறேன்.  அவர்களின் விமர்சனங்களை கவனிக்கிறேன். ஆனால் அவற்றை பொருட்படுத்தவில்லை’ என்று கூறியுள்ளார். ‘பிரிஸ்பேனில் ஆட முடியாது’  என்று இந்தியா சொன்னதை,  ‘தேவையில்லாமல் திசை திருப்பியதாகவும்’ ‘அதனால்தான் தொடரை இழந்தோம்’ என்று டிம் பெய்ன் சொன்னார். ஆனால் பிரிஸ்பேனில் ஆடிதான் இந்தியா சாதனை படைத்தது.

Related Stories: