×

12 வார கால இடைவெளியில் பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டால் கொரோனாவுக்கு எதிர்வினை ஆற்றும் தன்மை 3.5 மடங்கு அதிகரிப்பு : ஆய்வில் தகவல்

வாஷிங்டன் : 12 வார கால இடைவெளியில் செலுத்தப்படும் பைசர் தடுப்பு மருந்தில் கொரோனாவுக்கு எதிர்வினை ஆற்றும் தன்மை 3.5  மடங்கு அதிகம் உருவாகும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பைசர் பையோன்டெக் நிறுவனம் உற்பத்தி செய்யும் தடுப்பு மருந்து அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது.

அமெரிக்காவில் மருந்து  கட்டுப்பாளர்கள் அமைப்பு மற்றும் உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம் செய்யும் தடுப்பூசியை இந்தியாவில் அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எனவே இந்தியாவில் பைசர் தடுப்பு மருந்து விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பைசர் தடுப்பூசி செலுத்தப்படும் நபர்களுக்கு கொரோனாவுக்கு எதிர்வினை ஆற்றும் தன்மை அதிகம் உள்ளதாக நியூயார்க் நகர சுகாதாரத்துறை ஆணையர் கூறியுள்ளார்.

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், உணவு மற்றும் மருந்து கட்டுப்பாளர்கள் அமைப்பு அறிக்கையின்படி, சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி பாதுகாப்பாக உள்ளது.ஏற்கனவே கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பைசர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட இளைஞர்களுக்கு கொரோனாவுக்கு எதிர்வினையாற்றும் தன்மை அதிகம் உள்ளது ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது, என்று கூறினார்.


Tags : Pfizer , பைசர் தடுப்பு பைசர் தடுப்பு
× RELATED 12 -15 வயது சிறார்களுக்கு கொரோனா...