2 நடிகர்களுக்கு கொரோனா

சென்னை: காமெடி நடிகர் சென்ராயனுக்கும், வில்லன் நடிகர் டேனியல் பாலாஜிக்கும்  கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பொல்லாதவன் படத்தில் அறிமுகமானவர், சென்ராயன். அதன் பிறகு சிலம்பாட்டம், ஆடுகளம், ரவுத்திரம், மூடர் கூடம், ரம்மி, யட்சன், ஸ்பைடர், வட சென்னை, அசுரன், சுல்தான் போன்ற படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்ராயனுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார். வேட்டையாடு விளையாடு, பைரவா, பொல்லாதவன் உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர், டேனியல் பாலாஜி. பல்வேறு படங்களில் வில்லனாக நடித்துள்ளார். அவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது.

Related Stories:

More