கொரோனாவுக்கு தயாரிப்பாளர் பலி

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர் கலைச் செல்வன் (35), நேற்று மரணம் அடைந்தார். கடந்த 4ம் தேதியன்று திரைப்பட தயாரிப்பாளர் கலைச்செல்வன் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இவர், சாருஹாசன் நடிப்பில் தாதா 87, நான் கடவுள் ராஜேந்திரன் நடிப்பில் டைம் இல்ல ஆகிய படங்களை தயாரித்தவர். வீட் டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு இருந்தார். சில நாட்களுக்கு முன் கொரோனா தாக்கம்  அதிகமானது. இதையடுத்து தாம்பரத்திலுள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டார்.  அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று  உயிரிழந்தார். அவருக்கு மனைவி, மகள் உள்ளனர்.

Related Stories:

>