டெஸ்ட் தர வரிசை முதல் இடத்தில் இந்தியா

துபாய்: இந்த  ஆண்டுக்கான டெஸ்ட் அணிகளுக்கான தர வரிசை  பட்டியலை ஐசிசி நேற்று  வெளியிட்டது. பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது.  ஆஸ்திரேலியாவுக்கு எதிராக  2-1, இங்கிலாந்துக்கு எதிராக 4-0 என்ற  கணக்கில் தொடர்களை கைப்பற்றியதால் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. வெஸ்ட்  இண்டீஸ், பாகிஸ்தான் அணிகளை 2-0 என்ற கணக்கில் வீழ்த்திய நியூசிலாந்து 2வது  இடத்தை பிடித்துள்ளது. அடுத்த இடங்களில் இங்கிலாந்து(3), ஆஸ்திரேலியா(4),   பாகிஸ்தான்(5), வெஸ்ட் இண்டீஸ்(6),  தென் ஆப்ரிக்கா(7), இலங்கை(8),  வங்கதேசம்(9) இடங்களில் உள்ளன. நீண்ட நாட்களுக்கு பிறகு ஜிம்பாப்வே 10வது  இடத்தை எட்டியுள்ளது. இதில் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா,  இலங்கை, வங்கதேசம் அணிகள் தங்கள் இடங்களை இழந்துள்ளன. ஆப்கானிஸ்தான்,  அயர்லாந்து அணிகள் டெஸ்ட் அந்தஸ்து இருந்தாலும், போதுமான போட்டிகளில்  விளையாடாததால் முதல் 10 இடங்களுக்குள் இடம் பிடிக்கவில்லை.

Related Stories:

>