நீதித்துறையில் 106 நீதிபதிகள் 2,768 ஊழியருக்கு தொற்று

புதுடெல்லி: கொரோனா வைரஸ் நீதித்துறையையும் கடுமையாக பாதித்துள்ளது. இது குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா கூறியதாவது:கொரோனாவுக்கு 3 உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் 34 நீதித்துறை அதிகாரிகள் பலியாகி உள்ளனர். நீதிமன்ற பதிவுத்துறை ஊழியர்கள் 800 பேர் நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். மேலும், 106 நீதிபதிகளும், 2,768 அதிகாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தொற்று நோயால் உச்ச நீதிமன்றத்தில் உள்ள சக நீதிபதிகள் உட்பட நீதித்துறையில் பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், நீதியை உறுதிப்படுத்த அனைவரும் பணியாற்றி வருகின்றனர்’’ என்றார்.

Related Stories:

>