மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் குப்பைத் தொட்டிக்குள் மருந்துகளை மறைத்து வைத்து விற்பனை செய்வதாக புகார்

மதுரை: மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் ஒப்பந்த பணியாளர் மருந்துகளை குப்பை தொட்டியில் மறைத்து வைப்பது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இதுகுறித்து ஒப்பந்த பணியாளரை பணியமர்த்தி இருக்கும் தனியார் நிறுவனம் விசாரணை நடத்தி அவரை பணிநீக்கம் செய்திருக்கிறது.

கொரோனா தொற்றின் 2வது அலையின் தாக்கத்தின் காரணமாக நுரையீரல் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டு பலர் உயிரிழக்கின்ற நிலை ஏற்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு இந்த ரெம்டெசிவிர் மருந்து அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படுகின்ற போதிலும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்கள் இந்த மருந்தை பெறுவதற்காக பல இடங்களில் சுற்றி திரிய வேண்டிய நிலை இருக்கிறது.

குறிப்பாக மதுரையை பொறுத்த அளவு கடந்த சனிக்கிழமை மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் இருந்து பொதுமக்களுக்கு தினமும் 500 குப்பிகள் மருந்து விநியோகம் செய்யப்படுகிறது. ஒருவருக்கு 6 குப்பிகள் வரை விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை அந்த மருத்துவமனையில் பணியாற்றக்கூடிய ஊழியர் ஒருவர் அங்கே ஒரு குப்பை தொட்டியில் இருந்து மருந்துகளை பதுக்கி வைத்து வெளியே எடுத்து செல்வது போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியான காட்சிகளை தொடர்ந்து இதுதொடர்பாக விசாரணை நடத்திட மதுரை மருத்துவமனை டீன் உத்தரவிட்டிருந்தார்.

இவர் ஏற்கனவே ஒரு தனியார் நிறுவனத்தின் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். அவரிடம் தற்போது விசாரணை நடத்தி இருக்கின்ற அந்த நிறுவனம் செல்லூர் பகுதியை சேர்ந்த அவரை தற்போது பணிநீக்கம் செய்திருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக ரெம்டெசிவிர் மருந்து கள்ளச்சந்தையில் விற்கப்படுவது தொடர்பாக தொடர்ந்து இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்ற விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Related Stories:

>