நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடரும் மழை மஞ்சளாறு அணை நீர்மட்டம் உயர்வு: பெரியகுளம் விவசாயிகள் மகிழ்ச்சி

பெரியகுளம்: நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழையால், பெரியகுளம் அருகே மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 48 அடியாக உயர்ந்துள்ளது.தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மஞ்சளாறு அணை உள்ளது. மொத்த உயரம் 57 அடி. மேற்குத் ெதாடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்தால், மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் உயரும். இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில், போதிய மழையின்மையால், அணைக்கு நீர்வரத்து இல்லாமல், அணையின் நீர்மட்டம், மொத்த உயரமான 57 அடியில் இருந்து 44 அடியாக குறைந்திருந்தது.

கடந்த சில நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில், பரவலாக மழை பெய்ததால், நீர்வரத்து துவங்கியது. தற்போது பெய்யும் தொடர்மழை காரணமாக, அணையின் நீர்மட்டம், ஐந்து நாளில் 4 அடி அதிகரித்து 48 அடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்து 38 கன அடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை. தொடரும் மழையால், அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் ெதாடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்சியடைந்துள்ளனர்.

Related Stories:

More
>