மினி பஸ்களை ஆம்புலன்ஸுகளாக மாற்றிய ஹரியானா மாநில போக்குவரத்து துறை!!!

பஞ்ச்புலா: கொரோனாவின் தீவிரத்தால் மருத்துவமனைகளில் படுக்கை தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் சூழலில் ஹரியானா மாநில போக்குவரத்து துறை மினி பஸ்களை ஆம்புலன்ஸுகளாக மாற்றியுள்ளது. கொரோனா இரண்டாம் அலையால் வடமாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

 மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள படுக்கை தட்டுபாடு முக்கிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் ஹரியானா மாநில போக்குவரத்து துறை 5 மினி பஸ்களை ஆம்புலன்சுகளாக உருவாக்கியுள்ளது.பஞ்ச்புலா பகுதியில் தயாராக இருக்கும் இந்த மினிபஸ் ஆம்புலன்சுகள் ஒவ்வொன்றிலுமே 4 ஆக்சிஜன் படுக்கைகளும் தேவையான மருத்துவஉபகாரணங்களும் இடம் பெற்றுள்ளன.

இந்த ஆம்புலன்சுகளை போக்குவரத்துதுறை ஊழியர்கள் இயக்குவார் என்றும், மக்கள் நல்வாழ்வுத்துறை ஊழியர்கள் ஆம்புலன்சுகளில் பணியாற்றுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>