கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் ஒரு நாள் ஊதியம் வழங்க முடிவு

சென்னை: கோ ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் விஸ்வநாதன் கோஆப்டெக்ஸ் நிர்வாக  மேலாண்மை இயக்குநருக்கு எழுதியுள்ள கடிதம்: தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு முதலமைச்சர், அவரது அமைச்சரவை சகாக்களும் மிக துரிதமாக செயல்பட்டு தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை  எடுத்து வருகிறார்கள்.

அவர்களுடன் முன்களபணியாளர்கள் மற்றும் வருவாய் துறை செயலாளர் மற்றும் ஊழியர்கள் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் முதற்கொண்டு அனைத்து அத்தியாவசிய துறை ஊழியர்களும் இரவு பகல் பாராது பணியாற்றி  வருகின்றனர்.  வேலை இழந்த குடும்பங்களுக்கு தமிழக அரசு ரூ.4 ஆயிரம் வழங்க  தமிழக அரசு முன்வந்ததற்க்கும்  தமிழக அரசின் செலவின தொகையில் பங்களிப்பாக  கோ-ஆப்டெக்ஸில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களது ஒரு நாள் ஊதியத்தை  வழங்கமுடிவு செய்துள்ளோம்.

Related Stories:

>