×

மீண்டும் உச்சத்தை நோக்கி பெட்ரோல், டீசல் விலை: தலா 22, 24 காசுகள் அதிகரிப்பு

சேலம்: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 3வது நாளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், மீண்டும் உச்சத்தை நோக்கி செல்கிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. தேர்தல் முடிவுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்த தொடங்கியுள்ளது. கடந்த 10ம் தேதி முதல் நேற்று வரை தொடர்ந்து 3 நாட்கள் விலையை அதிகரித்துள்ளனர். இந்த 3 நாளில் பெட்ரோல் 69 காசும், டீசல் 84 காசும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் விலையேற்றமானது, மீண்டும் உச்சத்தை நோக்கி செல்கிறது.

நாடு முழுவதும் தொடர்ந்து 3வது நாளாக நேற்று, பெட்ரோல் லிட்டருக்கு 22 காசும், டீசல் 24 காசும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.93.62ல் இருந்து 22காசு உயர்ந்து ரூ.93.84க்கும், டீசல் ரூ.87.25ல் இருந்து 24 காசு உயர்ந்து ரூ.87.49க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுவே, சேலத்தில் பெட்ரோல் ரூ.94.04ல் இருந்து 22 காசு அதிகரித்து ரூ.94.26க்கும், டீசல் ரூ.87.69ல் இருந்து 24 காசு அதிகரித்து ரூ.87.93க்கும் விற்பனையாகிறது. பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


Tags : Petrol, diesel prices up again: 22, 24 cents per head
× RELATED ஏப்ரல் 1 ஆம் தேதி ரூ.2000 நோட்டுகளை மாற்ற முடியாது: ரிசர்வ் வங்கி அறிவிப்பு