×

கொரோனா தடுப்பூசிகளை வீணாக்க வேண்டாம் :மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வேண்டுகோள்

டெல்லி : கொரோனா தடுப்பூசிகளை வீணாக்க வேண்டாம் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. தடுப்பூசி போடும் பணி தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது 2வது தவணை தடுப்பூசிக்காக ஏராளமானவர்கள் காத்திருப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அப்போது மாநிலங்கள் 2வது தவணை செலுத்திய வேண்டியவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

மத்திய அரசு அளிக்கும் தடுப்பூசிகளில் 70%-ஐ 2வது தவணைக்காக ஒதுக்க வேண்டும் என்றும் மாநிலங்கள் விரும்பினால் 100%ஐ கூட ஒதுக்கலாம் என்றும் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா தடுப்பூசிகளை வீணாக்குவதை மாநிலங்கள் குறைத்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ள மத்திய அரசு, தேவைப்பட்டால் தடுப்பூசி போடும் ஊழியர்களுக்கு மீண்டும் பயிற்சி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. தேசிய அளவில் தடுப்பூசி வீணாக்கப்படுவது குறைந்து இருந்தாலும் சில மாநிலங்கள் தொடர்ந்து தடுப்பூசிகளை வீணாக்கி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Tags : Federal Government , மத்திய அரசு
× RELATED டெல்லியில் மீண்டும் போராட்டம் நடத்த...