×

விசிக சட்டமன்ற தலைவராக சிந்தனை செல்வன் தேர்வு: திருமாவளவன் அறிவிப்பு

சென்னை: விசிக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முன்னணி பொறுப்பாளர்கள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், விசிக சார்பில் சட்டமன்ற  தேர்தலில் வெற்றி பெற்ற 4 எம்.எல்.ஏ.,க்கள் கலந்துகொண்டனர். அப்போது, சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு பொன்னாடை போர்த்தி, வெற்றிசான்றிதழ் வழங்கி வாழ்த்து பெற்றனர். மேலும் கூட்டத்தில், விசிக  சார்பில் தமிழக சட்டமன்ற தலைவர் தேர்வு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.  இதையடுத்து விசிக தமிழக சட்டமன்ற தலைவராக காட்டுமன்னார்கோவில் தொகுதி எம்.எல்.ஏ ம.சிந்தனை செல்வன் தேர்வு செய்யப்பட்டார்.  துணைத்தலைவராக நாகப்பட்டினம் தொகுதி எம்.எல்.ஏ ஜெ.முகமது ஷாநவாஸ், செய்யூர் எம்.எல்.ஏ மு.பாபு, கொறடாவாக திருப்போரூர் எம்.எல்.ஏ எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.



Tags : Chinthana Selvan ,Vizika Assembly ,Speaker , Chinthana Selvan elected as Vizika Assembly Speaker: Thirumavalavan Announcement
× RELATED ராகுல்காந்தி வழக்கில் பின்பற்றப்பட்ட...