கொரோனா சிகிச்சைக்கு ஐவர்மெக்டின் மருந்தை பயன்படுத்தக் கூடாது: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

பானாஜி: கொரோனா சிகிச்சைக்கு ஐவர்மெக்டின் மருந்தை பயன்படுத்தக் கூடாது என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. பாராசைட்டிக் தொற்று சிகிச்சைக்குப் பயன்படுத்தும் ஐவர்மெக்டினால் கொரோனாவை குணப்படுத்த முடியும் என சமீபத்தில் அமெரிக்க ஆய்வாளர்கள் அறிவித்தனர். இதைத் தொடர்ந்து 18 வயதுக்கு மேற்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு ஐவர்மென்டின் மருந்தை வழங்க கோவா மாநில அரசு அனுமதி வழங்கியது. இந்நிலையில், ஐவர்மென்டினை பயன் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தனது டிவிட்டரில், ‘‘கொரோனா வைரசை ஐவர்மெக்டின் மருந்து அழிக்க முடியும் என்பதை உறுதி செய்ய எவ்வித ஆதாரங்களும் இல்லை. இந்த மருந்தை கிளினிக்கல் சோதனைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்’’ என குறிப்பிட்டுள்ளார்.  ஜெர்மன் மருந்து நிறுவனமான மெர்க்கும் இதே எச்சரிக்கையை விடுத்துள்ளது.

Related Stories:

>