முதல் கம்யூனிஸ்ட் அரசின் அமைச்சர் கேரளாவின் ‘இரும்பு பெண்’ கவுரி அம்மா காலமானார்

திருவனந்தபுரம்: கேரளாவில் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவரான கவுரி அம்மா 102 வயதில் நேற்று அதிகாலை மரணம் அடைந்தார். இந்தியாவில் முதன்முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட் அரசு கேரளாவில் 1957ல் தான் அமைந்தது. அப்போது இஎம்எஸ் நம்பூதிரிபாடு முதல்வராக ஆனார். அந்த முதல் மந்திரி சபையில் கவுரி அம்மா வருவாய்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். கேரளாவின் இரும்பு பெண் என புகழப்படும் அவர் 6 முறை கம்யூனிஸ்ட் அமைச்சரவையிலும், காங்கிரஸ் கூட்டணி அமைச்சரவையிலும் மந்திரியாக இருந்து உள்ளார். 13 முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார். 2011 தேர்தலில் தோல்வியடைந்த பிறகு தேர்தலில் போட்டியிட வில்லை. கடந்த சில வாரங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று அதிகாலை சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். அவரது உடலுக்கு கேரள முதல்வர்  பிரனாய்விஜயன் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் சொந்த ஊரான ஆலப்புழாவுக்கு  அவரது உடல் கொண்டு செல்லப்பட்டு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

Related Stories:

>