சோனியா காந்திக்கு பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா கடிதம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் அவதூறு பரப்புவதாக குற்றச்சாட்டு

டெல்லி: கொரோனா பரவலை கட்டுப்படுத்த போராடி வரும் பிரதமர் நரேந்திர மோடி மீது காங்கிரஸ் கட்சி வேண்டும் என்றே அவதூறு பரப்பி வருவதாக பாரதிய ஜனதா குற்றம் சாட்டியுள்ளது. சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தின் போது அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி மத்திய அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதிலளித்து பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கடிதம் எழுதியுள்ளார். கொரோனா பாதிப்பு தொடங்கியதில் இருந்தே பிரதமர் நரேந்திர மோடி அனைத்து துறைகளையும் ஒருங்கிணைந்து மாநில முதல்வர்களுடன் ஆலோசித்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் இளைஞர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுவது போல மேற்கத்திய நாடுகளில் கூட இதுவரை செலுத்தப்படவில்லை என்று கூறியுள்ள நட்டா, இதை அறியாமல் காங்கிரஸ் வேண்டும் என்றே காங்கிரஸ் மத்திய அரசு மீது அவதூறு பரப்பி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். ஏழை, எளியோருக்கு தடுப்பூசிகளை இலவசமாக வழங்க பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்கள் முன்வந்துள்ள நிலையில் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்கள் அதற்கு முன்வருமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories: