×

குஜிலியம்பாறை அருகே கரும்பு தோட்டத்தில் தீ விபத்து

குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை அருகே ஆர்.கோம்பை எம்.களத்தூரை சேர்ந்தவர் நடராஜன். விவசாயி. அதே ஊரில் இவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இதில் 4 ஏக்கரில் கரும்பு தோட்டம் உள்ளது. இந்நிலையில் நேற்று திடீரென கரும்பு தோட்டத்தில் தீப்பற்றி எரிந்துள்ளது. இதை கண்ட நடராஜன் உடனே இதுகுறித்து குஜிலியம்பாறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

நிலைய அலுவலர் (பொ)முனீஸ்குமரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருந்த போதும் ஒன்றரை ஏக்கரில் பயிரிடப்பட்ட கரும்பு எரிந்து நாசமானது.


Tags : Kujiliambara , A fire broke out in a sugarcane field near Kujiliampara
× RELATED கலைஞர் பிறந்த நாள் விழா ஆதரவற்றோருக்கு அன்னதானம்