×

கூடுதல் கட்டணம் வசூல் செய்த 304 ஆம்னி பஸ்களுக்கு ரூ.38.12 லட்சம் அபராதம்: 24 பஸ்கள் சிறைபிடிப்பு

சென்னை,: கடந்த 8ம் தேதி முதல் 10ம் தேதி வரையில் விதிமுறைகளை மீறி பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்த 304 ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.38,12,890  அபராதத்தொகை வசூல் செய்யப்பட்டது. மேலும் 25 ஆம்னி பேருந்துகளும் சிறை  பிடிக்கப்பட்டதாக போக்குவரத்தத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தனியார் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் சொந்த ஊர் திரும்பும் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என்று தமிழக முதல்வர் ஆணைப்படி, போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்  அறிவுறுத்தியிருந்தார்.

அதன் அடிப்படையில் இந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் வகையில் 8ம் தேதி காலை 11.30 மணி முதல் 10ம் தேதி காலை 8 மணி வரை போக்குவரத்து ஆணையர் தென்காசி ஜவஹர் தலைமையில்  மாநிலத்தின் முக்கிய சாலைகளில் பல்வேறு குழுக்களாக இணைப் போக்குவரத்து ஆணையர்கள், துணை போக்குவரத்து ஆணையர்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன  ஆய்வாளர்கள் தனியார் பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகளை ஆய்வு செய்தனர்.

ஆய்வில் இந்த பேரிடர் காலத்தில் சேவை மனப்பான்மையோடு செயல்படாமல் பொதுமக்களை வருத்தும் வகையில் அதிக கட்டணம் வசூலித்த வாகனங்களின் மீது அனுமதி சீட்டு நிபந்தனைகளை மீறிய  குற்றத்திற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதன்படி மொத்தம் 304 ஆம்னி பேருந்துகள் மீது அபராதம் விதிக்கப்பட்டது. அபராதமாக ₹10,92,600 வசூலிக்கப்ட்டது. மேலும் அபராத வரியாக ₹27,20,290  வசூலிக்கப்பட்டது. அபராதக் கட்டணம் மற்றும் அபராத வரியாக மொத்தமாக ரூ.38,12,890 வசூல் செய்யப்பட்டது. 25 ஆம்னி பேருந்துகளும் சிறை பிடிக்கப்பட்டன. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Tags : Omni , Rs 30.12 lakh fine for 304 Omni buses for overcharging: 24 buses seized
× RELATED திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில்...