×

கேரளாவில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயம்

திருவனந்தபுரம்: கேரளாவில் பெரும்பாலான தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக அரசுக்கும், நீதிமன்றங்களுக்கும் ஏராளமான புகார்கள்  வந்தன. கடந்த சில நாட்களுக்கு முன் பாறசாலையில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு கொரோனா நோயாளிக்கு ஒரு நாள் ஆக்சிஜன் கட்டணமாக மட்டும் ரூ.46 ஆயிரம்  வசூலிக்கப்பட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதே போல மேலும் ஒரு மருத்துவமனையில் நோயாளிக்கு இரவில் உணவாக கஞ்சி கொடுத்ததற்கு கட்டணமாக ரூ.1,500 வசூலிக்கப்பட்டது. எனவே, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு  கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தர விட்டது.

இதை தொடர்ந்து கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு கட்டணத்தை நிர்ணயித்து கேரள அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. இதன்படி பொது வார்டில் ஒரு நாள் அதிகபட்ச  கட்டணம் ரூ.2,645 ஆகும்.   தேசிய அக்ரிடிடேஷன் அங்கீகாரமுள்ள மருத்துமனைகளில் அதிகபட்ச கட்டணம் ரூ.2910 ஆகும். அவசர சிகிச்சை பிரிவில் அக்ரிடிடேஷன் அங்கீகாரமுள்ள மருத்துவமனைகளில் ரூ.8,580ம், மற்ற  மருத்துவமனைகளில் ₹7,800ம் வசூலிக்கலாம். வென்டிலேட்டர் சிகிச்சைக்கு அக்ரிடிடேஷன் அங்கீகாரம் உள்ள மருத்துவமனைகளில் ரூ.15,180ம் மற்ற மருத்துவமனைகளில் ரூ.13,800ம் மட்டுமே  வசூலிக்க முடியும்.

Tags : Kerala , Charging for corona treatment in private hospitals in Kerala
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...