மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: அலெக்சாண்டர் ஸ்வெரவ் சாம்பியன்

மாட்ரிட்: மாட்ரிட்  ஓபன் ஆடவர் டென்னிஸ் போட்டியின் இறுதிப்போட்டியில் இத்தாலியின் மேட்டியோவை  வீழ்த்தி ஜெர்மனியின் அலெக்சாண்டர் 2வது முறையாக சாம்பியன் பட்டம்  வென்றார்.ஸ்பெயியினில் மாட்ரிட் ஓபன் ஆடவர் டென்னிஸ் போட்டி நடந்தது.  அதன் இறுதிப்போட்டியில் உலகின் 6ம் நிலை வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரவ்(ெஜர்மனி),   உலகின் 9ம் நிலை வீரர் மேட்டியோ   பெரெட்டினி(இத்தாலி) ஆகியோர் மோதினர்.  இருவரும்  ஆரம்பம் முதலே வெற்றிக்கு வேகம் காட்டினர். அதனால் முதல் சுற்றில் இருவரும் மாறி, மாறி புள்ளிகளை குவித்தனர். ஒரு கட்டத்தில் இருவரும்  6-6 என சமநிலையில் இருந்தனர்.

அதனால்   டைபிரேக்கர் வரை நீண்ட முதல்  செட்டை   மேட்டியோ  7-6 என்ற கணக்கில் போராடி கைப்பற்றினார். முதல் சுற்றில் அதிக வேகம் காட்டியதால் ஏற்பட்ட சோர்வு காரணமாக மேட்டியோ அடுத்த  செட்களில்  தடுமாறினார்.  எனவே அலெக்சாண்டர் அடுத்த 2 செட்களையும் 6-4, 6-3 என்ற கணக்கில் வசப்படுத்தினார்.  சுமார் 2 மணி 40நிமிடங்கள் நீண்ட   இறுதிப்போட்டியில்  அலெக்சாண்டர் 2-1 என்ற செட்களில் வென்றதுடன் 2வது முறையாக  மாட்ரிட் ஓபன் கோப்பையை வென்றுள்ளார். ஏற்கனவே  2018ம் ஆண்டு நடந்த  மாட்ரிட் ஓபன் இறுதியாட்டத்தில்  ஆஸ்திரியாவின் டொமினிக் தீமை வென்று முதல்முறையாக சாம்பியன் ஆனார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அலெக்சாண்டர், ‘மோட்டியோவை வாழ்த்த விரும்புகிறேன். என்னைப் போலவே நீங்களும் இந்த பட்டம் வெல்ல தகுதியானவர். இதுப்போன்ற பட்டத்தை வென்றால்  நீங்களும் மகிழ்ச்சியாக உணர்வீர்கள். நானும் அப்படிதான் மிக மகிழ்ச்சியாக   உணருகிறேன். இது அற்புதமான நேரம்’ என்று கூறினார். மோட்டியோ பேசுகையில், ‘இது எனது முதல் இறுதிப்போட்டி. ஆனால் கடைசி போட்டி அல்ல. வருத்தம்தான்... என்றாலும்  இந்த இழப்பு இனி பயனுள்ளதாக இருக்கும்’ என்று தெரிவித்தார்.

Related Stories:

>