கொரோனா பாதிப்பு காரணமாக அண்ணா பல்கலை பேராசிரியர் பலி: அப்துல் கலாம் சேவா ரத்னா விருது பெற்றவர்

சென்னை: கொரோனா தொற்று பாதிப்பால் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் நேற்று இறந்தார். அண்ணா பல்கலைக்கழகத்தின் உற்பத்தி தொழில் நுட்பத்துறையில் பேராசிரியராக பணியாற்றி வந்தவர் சக்திநாதன். இவர் திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகத்தின்  முதல்வராகவும் இருந்தவர். தற்போது அவர் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் உற்பத்தி தொழில் நுட்பத் துறையில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.

அதன் பேரில் மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் இன்றி நேற்று அவர் இறந்தார். மறைந்த பேராசிரியர் சக்திநாதன் கடந்த 2016ம் ஆண்டு ஆராய்ச்சி மற்றும் கல்விப் பணிக்காக அப்துல் கலாம் சேவா ரத்னா விருது வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் மறைவு மாணவர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>