×

மாணவர்களின் எதிர்காலம் மிக முக்கியம்!: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து ஆலோசித்து முடிவு..அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி..!!

சென்னை: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆலோசித்து முடிவு செய்யப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வரும் நிலையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எப்போது நடத்துவது என்பது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையின் பொறுப்பு செயலாளராக இருக்கக்கூடிய அபூர்வா, துணை செயலாளர்கள், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், தேர்வு துறை இயக்குனர் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். 


தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 5ம் தேதி முதல் 31ம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறவிருந்தது. ஆனால் நாளுக்கு நாள் அதிகரித்து வரும்  கொரோனா தன்னுடைய கோரமுகத்தை காட்டியதன் விளைவாக 12ம் வகுப்பு தேர்வை தமிழக அரசு ஒத்திவைத்தது. நாடு முழுவதும் சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தின் கீழ் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எப்போது நடத்துவது என்பது குறித்து முடிவு எடுப்பதற்காக பள்ளிக்கல்வித்துறை சார்பிலான ஆலோசனை கூட்டமானது நடைபெற்றது. 


பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய அமைச்சர், 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எப்போது நடத்துவது என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினோம். நாளையும், நாளை மறுநாளும் இந்த ஆலோசனை நடைபெறும். மாணவர்களின் எதிர்காலம் என்பதால் மிகுந்த கவனத்துடன் முடிவெடுக்க வேண்டியுள்ளது. மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முடிவெடுக்குமாறு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆலோசித்து முடிவு செய்யப்படும் என குறிப்பிட்டார்.



Tags : Magesh , Class 12 General Examination, Advisory, Minister Anbil Mahesh
× RELATED பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில்...