×

நெருக்கடியான சூழலில் கை கொடுக்கும் உலக நாடுகள்!: சிங்கப்பூரில் இருந்து ஆக்சிஜன் டேங்கர்கள் இந்தியா வந்தன..!!

டெல்லி: பிராணவாயு சிலிண்டர்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளுக்கு இந்தியாவில் கடும் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில் பல்வேறு நாடுகள் தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி வருகின்றன. சிங்கப்பூர் அரசின் உதவி பொருட்களோடு கடந்த மே 5ம் தேதி அந்நாட்டில் இருந்து புறப்பட்ட ஐ.என்.எஸ். ஐராவதி என்னும் போர் கப்பல், இன்று காலை இந்தியா வந்து சேர்ந்துள்ளது. விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு வந்துள்ள இக்கப்பலில் 8 காரியோஜெனிக் பிராணவாயு டேங்கர்கள், 3,898 ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 


அரபு நாடுகளில் ஒன்றான கத்தாரில் இருந்து 27 மெட்ரிக் டன் ஆக்சிஜன் நிரப்பப்பட்ட இரண்டு டேங்கர்களை சுமந்துக் கொண்டு இந்திய கடற்படை கப்பலான ஐ.என்.எஸ்., திரிகண்ட் மும்பை துறைமுகத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறது. இதுகுறித்து கடற்படை கேப்டன் ஹரிஷ் பகுகுணா தெரிவித்ததாவது, கத்தார் நாட்டின் ஹமதி துறைமுகத்தில் இருந்து கடந்த 5ம் தேதி இந்த கப்பல் புறப்பட்டது. தற்போது ஐந்து நாட்கள் பயணத்திற்கு பிறகு மும்பை வந்திருக்கிறது. பிரான்ஸ், கத்தார் அரசுகளின் கூட்டு உதவி திட்டம் மூலமாக ஆக்சிஜன் கன்டெய்னர்கள் இந்தியா அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். 


அதேபோல் இஸ்ரேல் அரசு அனுப்பி இருந்த 1300 ஆக்சிஜன் செறிவூட்டிகள், வெண்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வான் வழியே உத்திரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்திற்கு வந்துள்ளன. இங்கிருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள் தேவைப்படும் மாநிலத்திற்கு விமானப்படையின் ஹெலிகாப்டர்கள் மூலம் அனுப்பிவைக்கப்பட இருக்கின்றன. 



Tags : Singapore ,India , Singapore, Oxygen Tankers, India
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...