×

கொரோனாவால் இறந்த பெண்ணின் உடலை கண்ணியத்துடன் அடக்கம் செய்த ஊராட்சி மன்ற தலைவர்!: குவியும் பாராட்டு

திருவள்ளூர்: கொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை கண்ணியத்துடன் இறுதி மரியாதை அளித்து நல்லடக்கம் செய்த ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். நெஞ்சை தொடும் இச்சம்பவம் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் அரங்கேறியுள்ளது. தடப்பெரும்பாக்கம் ஊராட்சியை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொரோனாவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 


அங்குள்ள திருவேங்கடபுரம் மயானத்திற்கு அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டது. எனினும் எந்த பெண்ணின் உடலை புதைக்க யாரும் முன்வரவில்லை. இதையடுத்து தடப்பெரும்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பாபு, வார்டு உறுப்பினர் பாலாஜி, முன்னாள் வார்டு உறுப்பினர் பிரேம்குமார் மற்றும் ஜெயகிருஷ்ணன் என்ற சமூக ஆர்வலர் ஆகிய 4 பேரும் பாதுகாப்பு கவச உடைகளை அணிந்து அந்த பெண்ணின் உடலை கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்தனர். 


ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். கொரோனா தொற்றால் உயிரிழந்த பெண்ணின் உடலை அவர்களது உறவினர்களும், ஊழியர்களும் புதைக்க முன்வராத நிலையில் ஊராட்சி மன்ற தலைவரே மயானத்திற்கு சென்று நல்லடக்கம் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 



Tags : Corona , Corona, woman's body, burial, parishioner
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...